May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உதயமானது தென்காசி ,செங்கல்பட்டு மாவட்டங்கள்

சட்டசபையில் முதல்வர் 110 விதியின் கீழ் தென்காசி மற்றும் செங்கல்பட்டு என இரு மாவட்டங்களை தனி மாவட்டமாக அறிவித்தார் இது34,35 வது மாவட்டங்களாக இதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்கிறது
தென்காசி மாவட்ட அறிவிப்பு குறித்து தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கூறியதாவது
தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மறைந்த முதல்வர் அவர்களிடம் என் முதல் கோரிக்கையாக வைத்தேன் ,முதல்வரும் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டார் அன்றே நிச்சயம் அம்மா ஆட்சியில் தனி மாவட்டம் அறிவிப்பு வந்து விடும் என நம்பிக்கை எனக்கு இருந்தது தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற சொல்லுக்கேற்ப்ப அம்மாவின் வழியில் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்து காட்டிவிட்டார்கள் ,தென்காசியை தலைமையிடமாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள் ,இந்த மண் வாஞ்சிநாதன் நாதன் பிறந்த மண் மிகவும் புகழ்பெற்ற மண் இந்த பெருமை பெற்ற தென்காசிக்கு மாவட்ட அந்தஸ்து வழங்கிய முதவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்
இந்நிலையில் எந்தெந்த ஊர் தென்காசியோடு இணையப் போகிறது என்கிற ஆவல் மக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது

About Author

You may have missed

error: Content is protected !!