May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உங்கள் வீடு கண்காணிப்பில்உள்ளதா ?

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் இரு வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைந்து 108 கிராம் தங்க நகைகள் கொள்ளை.பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை .
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காமராஜர் நகரில் ஒருவரின் வீட்டை உடைத்து 48 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்துள்ளனர் ,இதேபோல் கே.டி.சி நகரில் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைந்து 60 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பெரும் பாலும் திருடர்கள் நோட்டம் விட்டு பின்னர் திருட வருகின்றனர் ,தனியாக உள்ள வீடுகள் ,வீட்டில் அனைவரும் வேலைக்கு செல்லும் வீடுகள் ,வயது முதிர்ந்தவர்கள் உள்ளவீடுகள் ,கண்காணிப்பு கேமரா இல்லாத வீடுகள் என பல வகையில் நோட்டம் விடுகின்றனர் ,நல்ல வசதி வாய்ப்பு படைத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அனைவரும் சேர்ந்து இரவு பகல் என பாதுகாவலர்கள் நியமிக்கலாம் ,பலரும் வாட்ச்மேன் களுக்ககுறிப்பாக உங்கள் வீட்டை பாதுகாக்கும் நபர்களுக்கு தராளமாக சம்பளம் கொடுக்கலாம் உங்களையும் உங்கள் உடைமைகளையும் பாதுகாக்கும் நபர்களை நீங்கள் தான் வாழ வைக்க வேண்டும் ,மேலும் தங்கள் வீட்டு வெளிபுறங்களில் உதரணமாக வீட்டு வாசல்,காம்பவுண்ட் சுவர் போன்றவற்றில் ஏதேனும் குறியீடு இருந்தால் அதை காவல்துறைக்கு தகவல் சொல்லிவிட்டு பின்பு அழியுங்கள்,சிறிய அடையாளம் தானே என்று கவனக்குறைவாக இருக்கவேண்டாம் ,அதே போல வெளியூர் சென்றால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிவிட்டு செல்லுங்கள் பாதுகாப்பு மிக அவசியம்

About Author

You may have missed

error: Content is protected !!