May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உங்கள் தடைகளை தகர்க்க காவல்துறை உறுதுணையாக நிற்கும் நெல்லை காவல்துறை துணை ஆணையர்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு” திருநெல்வேலி பாளையங்கோட்டை சாரா டக்கர் கல்லூரி மாணவிகளுக்கு மாநகர காவல்துறை சார்பாக காவலன் SOS செயலி பற்றிய விளக்கவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் [சட்டம் & ஒழுங்கு]  ச. சரவணன் உரையாற்றிய உரையின் முக்கிய அம்சம்

காவலன் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்என்றும் ,எப்படி கையாள வேண்டும் என செயல்  விளக்கம் அளித்தார் எப்போதும்நீங்கள் அறிந்ததை உங்கள்குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் .

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை காவலன் செயலி மூலம் உறுதி செய்யலாம் காவலன் செயலி எப்போதும் உங்களுடன் இருக்கும் காவல்காரன் .மாநகர காவல் துறையின் தூதுவர்களாக மாணவிகள் செயல்பட கேட்டுக் கொண்டார்  படிப்பு வேலை போன்ற லட்சியங்களை எட்ட தடையாக உள்ளதை காவல்துறை உதவியுடன் எதிர் கொள்ளுங்கள் இவ்வாறு துணை ஆணையர் பேசினார்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை The Consultanzy நிர்வாகி பத்மநாப கமல் மற்றும் சிறுவர் உதவிப் பிரிவு ஆய்வாளர் எழிலரசி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

“நமது நெல்லை
பாதுகாப்பான நெல்லை”

#Kavalansos #Tirunelvelicitypolice

About Author

error: Content is protected !!