May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஈஷா -எம்.எஸ்.பி.வி.,கல்லூரி இணைந்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம்
மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி
வைத்தார்.
உலக சுற்றுசூழல் தினம். சுற்றுசூழலை மேம்படுத்த பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் பகுதியில் ஈஷா பசுமை கரங்கள் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் எம்.எஸ்.பி.வி. பிளான்டேஷன்க்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவில் 10,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் வில்பா பிரபாகர் சதிஷ் தொடங்கி வைத்தார்.எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் வே.காளியப்பன் முன்னிலை வகித்தார்.
ஈஷா பசுமை கரங்கள் திட்டம் மற்றும் பாவூர்சத்திரம் MSPV பாலிடெக்னிக்கல்லூரி சார்பில் மரங்கள் நடப்பட்டது. ஏக்கர் ஒன்று 400 மரங்கள் வீதம் 25 ஏக்கரில் 10,000 மரங்கள் நடப்பட்டன. இதில் வேங்கை, தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 10 வகையான மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்களை நட்டு, மரம் நடுதல் குறித்து உறுதி மொழி எடுத்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் MSPV நிர்வாகம் சார்பில் வீட்டில் வளர்க்க தேவையான அவரவர் விரும்பிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
ஒரு நாடு செழிப்படைய மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பாக இருக்க வேண்டும். தற்போது நாட்டை 33 சதவீத நிலப்பரப்பாக மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம். தற்போது 21 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பாக உள்ளது. மீதமுள்ள 12 சதவீதத்திற்கு 11.4 கோடி மரங்கள் நட வேண்டும். அவ்வாறு மரங்களை நடும் போது நாடு செழிப்படையும். ஜூன் 5-ஆம் தேதியான இன்றைய தினத்தின் அவசியம் குறித்து மக்களிடையே மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்று ஈஷா பசுமை கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர்,விழாவில் திட்ட அலுவலர் பழனி, தாசில்தார் சண்முகம், ஈஷா பசுமைக்கரங்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி சர்விகா, எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் இயக்குனர்கள் பெ.ராஜேஷ்சங்கரகுமார், கா.லெட்சுமி ஆனந்த், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ஜி.ரமேஷ் திருநெல்வேலி தெட்சண மாறநாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன், முன்னாள் யூனியன் சேர்மன் எஸ்.கே.டி.பி.காமராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!