February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இலவச மடிக்கணினி செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணியை வழங்கினர் எம்.எல்.ஏபாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 184 மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார்.

பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை சவுந்திரசேகரி வரவேற்றார். அங்கு 1111 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதேபோல் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பொறுப்பு தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. அங்கு படிக்கும் 50 மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மடிக்கணிகளை வழங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன். இளமதி. ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், முன்னாள் யூனியன் தலைவர் உத்திரகுணபாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், பாலன்புராஜா, ராஜையா, ஆறுமுகப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மூன்று பள்ளிகளிலும் சேர்த்து 1345 மாணவ – மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

About Author

error: Content is protected !!