February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இயக்குனர் விசு மறைவு சரத்குமார் இரங்கல்

 

இயக்குனர் விசு மறைவு குறித்துஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் தனதுஇரங்கல் செய்தியில்

நாடக ஆசிரியர், திரைப்பட வசன கர்த்தா, இயக்குனர், நடிகர் என கலையுலகில் பன்முகத்தன்மையுடன் சிறந்து விளங்கியவரான திரு.விசு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.

சமுதாய கருத்துகளை நகைச்சுவையாக, நாகரிகமாக எடுத்து சொல்வதில் ஆற்றல் மிக்கவர் திரு.விசு அவர்கள். தனது திரைப்படங்களின் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பாச சிக்கல்களை நகைச்சுவை உணர்வோடும், எதார்த்தமாகவும், அழுத்தமாகவும் எடுத்து கூறியவர். சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி என திரைப்படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு அளிப்பதில் வல்லவர்.

தொலைக்காட்சிகளில் “அரட்டை அரங்கம்”, ” மக்கள் அரங்கம்” நிகழ்ச்சி மூலம் பல ஊர்களுக்கும் சென்று பல்வேறு தலைப்புகளில் சமுதாய நலன் சார்ந்த மக்களின் கருத்துகளை திறமையாக வெளிக்கொணர்ந்தவர்.

அவரது இழப்பு நாடகம், திரைத்துறை, சின்னத்திரை உலகிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்

 

About Author

error: Content is protected !!