July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எல்லோரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தப்பட்டது கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்றநோக்கில்தான் 144 தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டது

நாம் இப்படி யோசிக்கும் முன்பு அரசாங்கம் அப்படி யோசிக்காமல் இருக்குமா  சென்னையில் வசிக்கும் வெளியூர் நபர்கள் எத்தனை லட்சம் பேர் என்பது அரசாங்கத்திற்கு நன்று தெரிந்திருக்கும் மேலும் இவ்வளவு லட்சம் மக்கள் இங்கு கூடுவார்கள் என்பது அறிந்து அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் நாம் வெறுமனே வெளியூரில் இருந்து கொண்டு வாட்ஸ் அப்பில் படத்தை பார்த்து ஆளுக்கு ஒரு கருத்தை பரப்பிக் கொண்டிருக்கிறோம் அது மிகவும் தவறு நீங்கள் நன்கு கவனியுங்கள் இந்த படத்தில் கூட ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் நீங்கள் என்ன கவலைப்பட்டு இந்த படத்தை அனுப்புகிறீர்கள் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரிகிறதா ?

எதிர்பாராத விதமாக இந்த விடுமுறை அறிவிப்பால் பணி சூழல் காரணமாக வெளியூரில் வசிக்கும் நண்பர்கள் தங்கள் ஊர் சேர கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து விட்டனர் இந்த கூட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டுமே இதேபோல் கோவை மதுரை போன்ற பெரிய நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனைவரும் முண்டியடித்துக் கொண்டிருப்பர்கள் இதனால் தொற்று ஏற்படாதா என்கிற சந்தேகம் இருக்கும் தற்போது வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு  வந்தவர்களால் தொற்று இருக்கக்கூடும் என்று அரசாங்கம் அவர்களை பரிசோதனை செய்து அனுப்பி வருகிறது தாங்களுக்குள் சந்தேகம் இருப்பின் தாங்களாகவே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் தங்களுக்கு தொற்றுக்கான அதாவது அரசு அறிவித்துள்ள தும்மல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின் ஊர் சேர்ந்தபின் பின் அனைவரும் தங்கள் உடல் நிலையை அருகில் உள்ள சுகாதார மையத்தில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் தங்களுக்கு இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம் தேவையில்லாத வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்

மேலும் தும்மல் காய்ச்சல் இருப்பின் தாங்களாகவே மருத்துவராகி வைத்தியம் பார்க்க வேண்டாம் மேலும் அருகிலுள்ள மருந்துக்கடைகளில் எவ்வித மருந்துகளையும் தாங்களாகவே வாங்க வேண்டாம் மருத்துவரின் பரிந்துரை இல்லாத அவர்களுக்கு மருந்து கடைகளில் மருந்துகள் வழங்க மாட்டார்கள் இருப்பினும் தங்களுக்கு மருந்து கடைக்காரர்கள் நண்பர் உறவினர் என்ற வாய்ப்பை பயன்படுத்தி சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்குவதை தவிர்க்கவும் இது இப்போது மட்டுமல்ல எந்தக் காலத்திலும் செய்ய வேண்டாம்

நாம் உறங்கும்போதும்  ,போதும் ஓய்வில் இருக்கும் போதும் நமக்காக உறங்காமல் ஓய்வில்லாமல் சரிவர சாப்பிடாமல் நம்மை காக்க வெளியில் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் இதர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ,தன்னார்வலர்கள் என பலரும் தங்களை வருத்திக்கொண்டு இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை

About Author

error: Content is protected !!