February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இன்று வெளியாகும் தேமுதிக கூட்டணி அறிவிப்பு

பொதுவாகவே தேர்தல் என்றால் திருவிழாதான் மற்ற மாநிலங்கள் எப்படியோ தமிழகத்தில் அதிரிபுதிரி அதகளம் பண்ணிடுவாங்க தமிழக அரசியல்வாதிகள் அந்தவரிசையில் தற்போதைய பாராளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கூட்டி விட்டது ,
நேற்றுவரை எதிர் எதிர் துருவங்காளாக இருந்தவர்கள் இன்று இணைந்து விடுவார்கள் காரணம் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை
இனி திராவிட கட்சிகளோடு கூட்டணி கிடையாது பத்திரத்தில் எழுதி தரவா என்ற மருத்துவர் இராமதாஸ் முதல் ஆளாக அதிமுகவோடு இணக்கம் ஆகி பெரிய அளவில் சீட்டுகளை பெற்று வந்துவிட்டார்
கடந்த முறை மக்கள் நலக் கூட்டணி அமைத்தவர்களில் தேமுதிக ,தமாகா தவிர அனைவரும் திமுக கூட்டணியில்
தனித்து நின்று களம் கண்டவிஜயகாந்தை கிண்டல் செய்தவர்கள் இன்று ஏதாவது கூட்டணியோடு இணைத்தால் நல்லது என்கிறார்கள் ,இனி தேமுதிக அவ்ளோதான் என்றவர்கள் எல்லாம் அவர் இல்லம் நோக்கி படையெடுத்து வந்தார்கள் கேட்டல் உடல் நலம் விசாரிக்க சென்றோம் என்கிற அறிவிப்பு வேறு சிகிட்சை முடிந்து வந்த உடன் சென்று பாராமல் இப்போது என்ன அவசரம் என்று இணையதள வாசிகள் வறுத்து எடுத்து விட்டனர்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் முன் கோபக்காரர் என்கிற பெயரை தவிர விஜயகாந்திற்கு வேறு எந்த கெட்டப் பெயரும் இல்லை அதுவும் அவரின் எதார்த்தம் என மக்கள் கடந்து சென்று விட்டனர் அவரின் எம்.எல்.ஏ களின் பெயரிலும் எந்தவித ஊழல் குற்றசாட்டுகளும் இல்லை எனவே தேமுதிக மீதுள்ள கிளீன் இமேஜ் தான் பிற கட்சிகள் விஜயகாந்த் நம்மோடு இருந்தால் நல்லது என்கிற எண்ணத்தில் கூட்டணி பேசி வந்தனர்
அந்த வகையில் இன்று தேமுதிக அதிமுகவின் மெகா கூட்டணியில் இணையும் என்கிற அறிவிப்பை எதிர் பார்க்கலாம் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்
விஜயகாந்த் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர் எனவே இன்று நிறைந்த அம்மாவாசை எனவே இன்று கூட்டணி அறிவிப்பை கேப்டன் இன்று வெளியிடுவார் என தெரிகிறது

About Author

error: Content is protected !!