May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வெளியில் இருந்த படியே சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்

சனி மஹாப்பிரதோஷம் சாமி தரிசனம் செய்ய முடியமல் பக்தர்கள்ஏமாற்றம்

20-03-2020 காலை 8 மணி முதல் 2020 மார்ச் 31 வரை, தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களில் பூஜைகள் மட்டுமே கால அட்டவணையின்படி செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.கொரனோ (கோவிட் 19) தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதித்து வருகிறது .மேலும் இதே நடைமுறையை கோவில்களிலும் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது

வெளியில் இருந்த படியே சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்

இதனால் கோவிகளில் வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் பக்தர்களால் தரிசனம் அனுமதிக்கப்படக்கூடாது. என  அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது, மேலும் பல மாவட்டங்களில் உள்ளபிரசித்திபெற்ற கோயில்களில் எப்படியும் சாமி தரிசனம் செய்து விடலாம் வெளியூரில் இருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்னால் அனுமதில் அளிப்பார்கள் என்ற நினைப்பில் பலரும் கோயில்கள் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்  16  திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை மற்றும் திருவோண நட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அண்மையில் இந்த ஆலயத்தில் சுவாதி நட்சத்திர நாளில்
கொரனோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், பரவாமல்  இருப்பதற்காகவும் யாகம்,  கூட்டுப் பிரார்த்தனை  உள்ளிட்ட சிறப்பு பூஜை  நடைபெற்றது குறிபிடத்தக்கது

இன்று சனி மஹாப்பிரதோஷம் என்பதால் இங்கும் அருகில் உள்ள ஸ்ரீ சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரர் ஆலயத்திற்கும் வந்த பல பக்தர்கள் வந்து திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர்

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தின் முன் அரசு அறிவிப்பு

இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது :-

நான் வாரம் தோறும் எந்த வேலை இருந்தாலும் கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மரை தரசிப்பது வழக்கம் அன்று எந்த வேலை இருந்தாலும் காலையோ அல்லது மாலையோ எப்படியும் தரிசனம் செய்வது வழக்கம் , இன்று அரசு உத்தரவை கடைபிடிப்பதாக கோவில் நிர்வாகத்தினர் சொல்லிவிட்டனர் , இருந்தாலும் நரசிம்மரை வாசலில் இருந்தே தரிசித்துவிட்டேன் என கூறினார்

About Author

You may have missed

error: Content is protected !!