March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இந்திய குடியுரிமை சட்டத்தால் எந்த ஒரு இந்தியருக்கும் பாதிப்பில்லை இல கணேசன்

இந்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய போர்கள் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவாக பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தென்காசி மாவட்டம் தென்காசியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை விலக்கில் இருந்து பேரணி துவங்கியது பேரணியை மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேரணி தொடங்கி வைத்தார் பேரணி புதிய பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் ராம ராஜா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் சுப நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாஜகவின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இல கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு தென்காசி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இல கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய குடியுரிமை சட்டத்தால் எந்த ஒரு இந்தியருக்கும் பாதிப்பில்லை ஆனால் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பிரச்சாரங்கள் செய்து விடுகின்றது உண்மையிலேயே பாதிப்பு கள்ளத்தனமாக ஓடி வருவதற்கும் அவர்களுக்கு வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வழங்கிய கட்சிகளுக்கும் குறிப்பாக திமுக கட்சிக்கும் பாதிப்பு உண்டு. காரணம் அவ்வளவு கூடியதாகவும் தவிர ரேஷன்கார்டு ரத்தாகும் அது பாதிக்கப்பட்ட கட்சியான திமுக அல்லது தேசிய எதிர்கட்சியாக இருக்கும் அதனால் யாரும் நம்ப வேண்டாம் என்பது என் கருத்து கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி வருவது நடுநிலையாளர்கள் முதற்கொண்டு நமக்காக மாறிவிடுகிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

error: Content is protected !!