May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இந்திய அளவில் கல்வி கற்ப்போரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது தென்காசியில் முதல்வர் பழனிச்சாமி தகவல்.

நெல்லை மாவட்டம் தென்காசி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்படட தென்காசி, கடையநல்லூர்;, சங்கரன்கோவில் உள்ளிடட பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தென்காசி புதிய பேரூந்து நிலையம் முன்பு கிருஷ்ணசாமிக்கு வாக்குகளை சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது பா.ம.க, பா.ஜ.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது :-

மத்தியில் நிலையான ஆட்சி திறமையான பாரத பிரதமர் அமைய நமது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை பொது மக்கள் பார்க்க வேண்டும். திமுக அறிக்கை பொய்யான அறிக்கை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற திமுக சதி செய்கிறது.
நான் ஒரு விவசாயி. இன்று ஒரு விவசாயி நாட்டின் முதல்வராக இருப்பது விவசாயிகளுக்கு பெருமை. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்றும் அரசு தான் அதிமுக அரசு. இது மக்களுக்கான அரசு. விவசாயத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து வறட்சி மற்றும் பருவ காலங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக ஏரி குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய அளவில் கல்வி கற்போரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழகம் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. நகர்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களுக்கு சீருடை, காலணி, பை, புத்தகம் மற்றும் ரூ.14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி வழங்கி சிறந்த கல்வியை உலகத்தரத்திற்கு ஏற்ப அனைவருக்கும் கல்வியை கொடுத்து வருகிறோம்.

மேல்நிலைக்கல்வி, உயர்கல்வி படிக்க அதிகமான நிதியை ஒதுக்கி இந்திய அளவில் கல்வியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வந்துள்ளோம்.
கல்வியில் சிறந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். 12 ஆயிரம் கிராமங்களுக்கு ரூ.4000 கோடி மதிப்பீட்டில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற மாணவர்கள் கிடைக்கும் வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை உயரும் போது ஏமாற்றுப்பேர்வழிகள் எந்த வேலையும் செய்ய முடியாது. மேலும் நாட்டின் பிரதமர் வலிமையாக இல்லை என்றால் நாடு பாதுகாப்பாக இருக்காது. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும் அதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்

About Author

error: Content is protected !!