June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம், மற்றும் சிலர் மறைவு என 21 சட்டமன்றத் தொகுதிகல் காலியாக இருந்தது 18 தொகுதிகளில் மட்டும், பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பின்னர், சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் காலமானதால், அந்த தொகுதியும் காலியானது.
தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரவே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்து .
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பார்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி,இவர் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு எம்.சி. சண்முகையா, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் இவர் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் இவர்கள் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

About Author

You may have missed

error: Content is protected !!