February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும் -ஓபிஎஸ் நம்பிக்கை

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர்  ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார் . பின்னர்  அவர் நிருபர்ககளிடம் கூறியதாவது:
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 13 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம்  கூட்டணி கட்சியினர் அனைவரும் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

About Author

error: Content is protected !!