May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி மாணவர்களின்சாலை பாதுகாப்பு பேரணி

தென்காசியை அடுத்த ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து , தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, தமிழ்நாடு காவல்துறை, குற்றாலம் மெட்ரோ ரோட்டரி கிளப், மற்றும் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளி சாலை பாதுகாப்பு சங்கம் இணைந்து ஆவுடையானூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணிக்கு ரோட்டரி கிளப் கணேசன் தலைமை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப், ரோட்டரி கிளப் முன்னாள் துணை ஆளுநர் முருகன்ராஜ், வருங்கால ஆளுநர் ஜான்ஸ், முன்னாள் துணை ஆளுநர் ஆவுடையப்பன், முன்னாள் தலைவர் ஜெயச்சந்திரன், முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் கூட்டமைப்பு மாநிலசெயலாளர் வைகைகுமார்,

ரோட்டரி கிளப் முன்னாள் துணை ஆளுநர் முருகன்ராஜ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் சாலை விழிப்புணர்வு குறித்து பேசினர். பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் சாலை விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் நடத்தினர், விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். குற்றாலம் ரோட்டரி கிளப் செயலாளர் சூரியபுத்திரன் நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!