June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆலங்குளம் அருகே விபத்து சம்பவ இடத்திலே 5 பேர் பலி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே காரும் -லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை-மகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண விருந்திற்கு நெல்லையில் இருந்து மட்டன் வாங்க சென்ற போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் வசிக்கும் தனது மாமா மகன் திருமணத்திற்கு குடும்பத்தினரோடு வந்துள்ளார். நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று விருந்திற்காக இறைச்சி எடுப்பதற்காக ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கப்பட்டினத்திற்கு தனது 3 வயது மகள் தனிக்கா, மற்றும் உறவினர்கள் மாமா முருகன் , நிரஞ்சன்குமார், நடராஜன் ஆகிய ஐந்து பேரும் காரில் ஆலங்குளம் நோக்கி வந்துள்ளனர். ஆலங்குளம் அருகே கரும்புளியுத்து என்ற ஊரை கடந்து வரும் போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 வயது குழந்தை தனிக்கா உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் காவல் துறையினர் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் அணைத்தும் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை – மகள் உள்பட 5 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆலங்குளத்தில் நெல்லை செல்லும் சாலையில் இது போன்ற விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைப்பதற்கு நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம், மற்றும் வேகத்தடைகள் அமைப்பது, அபாயகரமான பகுதிகளை அடையாளமிட்டு காண்பிப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அதன் வீடியோ இணைப்பு

About Author

error: Content is protected !!