June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆயிரப்பேரி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆய்வு

.தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி,  பாட்டப்பத்து ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு  விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று டிராக்டர் மூலம் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன்  உத்தரவுபடி தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வஊ) வெ.சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கிரேட் சர்ச்சில் ஜெபராஜ் ஆகியோர் தலைமையில் 14 ஊராட்சி பகுதிகள்  மற்றும் அந்த ஊராட்சிக்கு  உட்பட்ட குக்கிராமங்கள் மற்றும்   அனைத்து தெருக்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தென்காசி ஊராட்சி ஒன்றியம்  ஆயிரப்பேரி,  பாட்டப்பத்து  ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட   ஆயிரப்பேரி,  பண்ணைய தெரு, பசும்பொன் தெரு, ஜெஜெ நகர், குலசேகரப்பேரி, செண்பகாதேவி, பழைய குற்றாலம், அங்கராயன் குளம், உள்ளிட்ட பகுதிகளிலும் பாட்டப்பத்து  ஊராட்சிக்கு உட்பட்ட பாட்டப்பத்து, துவரன் குளம், காந்தி காலனி, கலைஞர்காலணி,  இந்திரா காலனி, ராஜீவ் காலனி, பாரதி நகர், பாட்டப்பத்து மேலூர்,  கீழூர்,  தேவர் வடக்குத்தெரு,  பிள்ளையார் கோவில் தெரு, தெற்குத்தெரு, உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியை தென்காசி மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் எம்.காந்திராஜா,  தலைமையில் தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வெ.சண்முகசுந்தரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) கிரேட் சர்ச்சில் ஜெபராஜ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.
 இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் ஆயிரபேரி சங்கரசுப்பிரமணியன் பாட்டத்து பொன்னுசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
அப்போது பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தனித்து இருக்க வேண்டும். சளி. இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரப்பேரி ஊராட்சி செயலாளர் இ.சங்கர சுப்பிரமணியன்,  பாட்டப்பத்து ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள்,  தூய்மைப் பணியாளர்கள்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.
Attachments area

About Author

You may have missed

error: Content is protected !!