May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆட்டோவில் தவறவிட்ட பணம் ஒப்படைத்த ஓட்டுநர்

ஆட்டோவில் தவறவிடப்பட்ட பணத்தை காவல்துறையிடம் நேர்மையாக ஒப்படைத்த
ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல்துறை

கடையநல்லூர் ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் ரூ6800 ஆட்டோ ஓட்டுநர் கடையநல்லூர் காவல்துறையில் ஒப்படைத்துள்ளார் நேர்மையா ஆட்டோ ஓட்டுநரை காவல்துறை பாராட்டியது

கடையநல்லூர் காங்கிரஸ் நகரதலைவர் சமுத்திரம் இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுனர் மூலம் பழம் வியாபாரம் செய்து வருகிறார் இவர் வியாபாரம் முடித்து விட்டு கடையநல்லூருக்கு வழக்கம் போல் வரும்போது அந்த வழியில் வயல்வெளியில் வேலை செய்யயும் பெண்களை செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்வார்.

இந்த நிலையில் அவரது ஆட்டோவில் பகல் நேரத்தில் காலாங்கரையில் ஏறிய பழனிச்சாமி மனைவி மாரியம்மாள் பயணித்துள்ளார் அவள் தேன்பொத்தை வரை பயணம் செய்த அவர் பின்னர் இறங்கி சென்று விட்டார் அப்போது வீட்டில் போய் பார்த போது மாரியம்மாள் மணி பர்ஸ் தவற விட்டது தெரிய வந்திருக்கிறது
அதற்குள் ஆட்டோ கடையநல்லூர் வந்து விட்டது அப்போது அந்த ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோவின் உரிமையாளர் சமுத்திரம் ஆட்டோவில் கிடந்த மணிபர்ஸை எடுத்து பார்தபோது அதன் உள்ளே பணம் ரூ 6800 இருந்ததை பார்த்தும் உடனே கடையநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டு விசாரித்து உரியவரிடம் ஒப்படைக்க சொல்லி விட்டு சென்று விட்டார் உடனே கடையநல்லூர் காவல்துறை செங்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் தனிப்பிரிவு காவலர் திருமலைகுமார் தேன்பொத்தை பகுதிக்கு தற்செயலா சென்ற போது பணத்தை தவறவிட்டது மாரியம்மாள் என தெரியவந்ததால் அவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் உனது பணம் உள்ளது என்ற தகவலை தொடர்ந்து மாரியம்மாளிடம் சொன்னார் உடனே ஆட்டோ உரிமையாளர் சமுத்திரம் மற்றும் மாரியம்மாளை ஆகியோரை அழைத்து கடையநல்லூர் காவல் உதவியாளர் விஜயகுமார் முன்னிலையில் தவறவிட்ட பணம் ரூ 6800 ஒப்படைக்கப்பட்டது
இதனையடுத்து ஏழ்மை நிலையிலும் நேர்மையாக செயல்பட்டு பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்,உரிமையாளர் ஆகியோரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

About Author

You may have missed

error: Content is protected !!