June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அவினாசி தேசிய நெடுஞ்சாலை விபத்து சமக தலைவர் ரா.சரத்குமார் இரங்கல்

தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து – லாரி மோதி விபத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்


திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள மாநில அரசு சொகுசுப் பேருந்தும், சேலம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 6 பெண்கள் உட்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது.
விலைமதிப்பில்லாத உயிர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கொடூரமாக பறிபோகும் வகையில் ஏற்படும் சாலை விபத்துகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியவை. பெரும்பாலும், கண்டெய்னர் லாரிகளால் நிகழும் விபத்துகளை தவிர்ப்பதற்கு வேகக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

ச ம க தலைவர் சரத்குமார்

நெடுந்தொலைவிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், குறிப்பாக இரவு நேர பயணங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வெடுத்து வாகனங்களை ஓட்டி வருகிறார்களா என்பதை காவல் துறையினர் கண்காணித்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த கொடூர விபத்தால் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

About Author

error: Content is protected !!