March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அவினாசி அருகே விபத்து பலியானோர் எண்ணிக்கை 20

பெங்களூரில் இருந்து கேரள நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதியது .

இதில் பேருந்து முழுவதுமாக உருக்குலைந்தது . பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் ரத்தவெள்ளத்தில் துடித்தனர்.

விபத்துகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் சிலர் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவிநாசி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் போராடி பஸ் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

About Author

error: Content is protected !!