May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சட்டமன்றத்தில் தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன்

அரியப்புரம் தனி வருவாய் கிராமம் எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன் கோரிக்கை

அரியப்புரம் தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் தென்காசி எம்எல்ஏ  செல்வமோகன் தாஸ் பாண்டியன் சட்டமன்றத்தில் கோரிக்கை.

சட்டமன்றத்தில் தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அரியப்புரம் ஊராட்சி பகுதியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சட்டமன்றத்தில் கோரிக்கை

சட்டமன்றத்தில் வருவாய் துறை மானிய கோரிக்கை நடைபெற்று வரும் நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசியதாவது

செல்வ மோகன்தாஸ் பாண்டியன்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரம் ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில் வாழும் மக்கள்
தங்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், உள்ளிட்ட அவசிய தேவைகளுக்கு அருகிலுள்ள ஆவுடையானூர் வருவாய் கிராமம் மற்றும் திப்பணம்பட்டி வருவாய் கிராமத்தை நாடி செல்கிறார்கள்.எனவே இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி அரியப்புரம் ஊராட்சி பகுதியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் :-

தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அரியப்புரம் ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமிழக அரசின் நிபந்தனைகளின் படி 2000 முதல் 2500 ஏக்கர் நஞ்சை நிலமும் 4000 முதல் 5000 ஏக்கர் புஞ்சை நிலமும் இருந்தால்தான் அந்த பகுதியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க முடியும். ஆனால் அரியப்புரம் ஊராட்சியில்
338.88 ஏக்கர் நஞ்சை நிலமும் 883.33 ஏக்கர் புஞ்சை நிலமும் மட்டுமே உள்ளது. எனவே அரியப்புரம் ஊராட்சியை தற்போது தனி வருவாய் கிராமமாக அறிவிக்க அரசு விதிமுறைகளின்படி தசாத்தியக் கூறுகள் இல்லை.

செல்வ மோகன்தாஸ் பாண்டியன் :- தமிழகத்தின் வருவாய் துறை அமைச்சர் அரசு விதிமுறைகளின்படி அரியப்புரம் ஊராட்சி பகுதியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பேசினார்.

2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் எனது கன்னி பேச்சின்போது தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று நான் பேசிய போது தமிழக வருவாய்த்துறை அமைச்சர் இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டு தமிழக முதல்வர், துணை முதல்வர், வருவாய்த்துறை அமைசர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் தென்காசிக்கு வருகை தந்து புதிய மாவட்டத்தை உருவாக்கித் தந்தார்கள். இதற்கு எனது சார்பிலும், தென்காசி தொகுதி மக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதைப் போலவே அரியப்புரம் ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க அரசு விதிமுறைகளின்படி தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்றாலும், இந்தப் பிரச்சனையில் வருவாய் துறை அமைச்சரும் தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும் சிறப்பு கவனம் செலுத்தி அந்த பகுதி மக்கள் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு அருகிலுள்ள ஆவுடையானூர் திப்பணம்பட்டி வருவாய் கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அரியபுரம் ஊராட்சி பகுதியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும்.

வருவாய்த்துறை அமைச்சர்: தென்காசி எம்எல்ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கையை ஏற்று தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவித்த தமிழக முதல்வரிடம் அரியப்புரம் தனி வருவாய் கிராமம் கோரிக்கையும் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள செய்வேன்.

செல்வ மோகன்தாஸ் பாண்டியன்: தென்காசி சட்டமன்ற தொகுதி
கல்லூரணி ஊராட்சி பகுதியிலுள்ள ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி ஊராட்சி மன்ற அலுவலகம், அதனை சுற்றியுள்ள 350 குடியிருப்புகள் உள்ள பகுதி தமிழக அரசின் வருவாய் துறை ஆவணங்களில் குற்றாலம் சத்திரம் என்று உள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பட்டா பெறுவதற்கும் தமிழக அரசு கொண்டுவந்துள்ள தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக அரசு கையகப் படுத்தியுள்ள நிலத்திற்காக தமிழக அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையை பெறுவதிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. எனவே வருவாய் துறை அமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அந்த பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்கவும், அரசு வழங்கும் இழப்பீடு தொகை கிடைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்த்துறை அமைச்சர்: இது சம்பந்தமாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அந்த இடம் பற்றிய விளக்கம் கேட்டு அதன்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

About Author

You may have missed

error: Content is protected !!