February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆலங்குளம் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் நெல்லை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் நேற்று கீழப்பாவூர் பேரூராட்சியில் அம்மன் கோவில் மைதானம், பஜார் வீதி, செங்குந்தர் பெரிய தெரு, ஆசாரி வடக்குத்தெரு, பஸ்ஸ்டாண்ட், சென்ட்ரல் பாங்க் சமீபம் சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், பெத்தநாடார்பட்டி, மகிழ்வண்ணநாதபுரம், நவநீதகிருஷ்ணபுரம், செல்லதாயார்புரம், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, அத்தியூத்து, ஆலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளான குறிப்பன்குளம், நல்லூர், ரெட்டியார்பட்டி, நெட்டூர் உட்பட பல பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி.,யுமான கே.ஆர்.பி. பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன், புறநகர் மாவட்ட அவைத் தலைவர் வீரபாண்டியன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேர்மபாண்டி, பெத்தநாடார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ராதா, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன், அட்மா சேர்மன் கணபதி, ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய இளைஞரணி இருளப்பன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழப்பாவூருக்கு வருகை தந்த மனோஜ் பாண்டியனுக்கு நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள எம்பியுமான கே.ஆர்.பி. பிரபாகரன் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்

About Author

error: Content is protected !!