June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதிமுக மாணவரணி பிரமுகர் வெட்டிக்கொலை

விருதுநகரில் முன்பகை காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44)இவர் கட்டிட கட்டுமான பொருள் விற்பனை செய்து வருகிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு பெற்றுள்ளார்
இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஒடிவிட்டனார்
தகவலறிந்து விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

About Author

error: Content is protected !!