February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதிமுக சார்பில் வாசனுக்கு ராஜ்யசபா பதவி பிரேமலதா ஏமாற்றம்

வாசனுக்கு ராஜ்யசபா: பிரேமலதா ஏமாற்றம்

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்வாக உள்ள ஆறு பேரில் தி.மு.க., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர்கள் யார் என எதிர்பார்த்த நிலையில் முன்னாளர் துணை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைபாளர் கே.பி. முனுசாமி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டனர்.

இதில் தம்பிதுரை ஏற்கெனவே எம்.பி.யாகவும் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார். இ.பி.எஸ். ஆதரவாளரான இவர், கடந்த லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்ததால், தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஓ.பி.எஸ்., ஆதரவாளரான கே.பி. முனுசாமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், கோகுல இந்திரா உள்ளிட்டவர்கள் மற்றும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வந்த நிலையில் த.மா.கா., கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தே.மு.தி.க., வில் பிரேமலதா, சுதிஷ் ஆகியோருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சிவசு

About Author

error: Content is protected !!