February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதிமுக அரசை கவிழ்க்க நினைப்பது மிகப்பெரிய துரோகம்-அமைச்சர் ஜெயக்குமார்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,கமல் கூறிய கருத்து மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.எம்ஜிஆர் அவர்களின் படங்களிலும் கண்ணியம் கோட்பாடு என அனைத்தும் இருந்தது அதே போல் அரசியலும் இருந்தது.கமலைப் பொறுத்தவரை திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை அரசியலும் இல்லை.அதிமுக என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று.திமுக கூட்டணி என்பது காகித ஓடு.வருகிற 23ம் தேதி காங்கிரஸ், திமுக,அமமுக, காகித ஓடநிலைமைக்கு வரும்.ரஜினிகாந்த் வேண்டாத மனிதர் அல்ல. எல்லோருக்கும் வேண்டியவர்தான் அதிமுகவிற்கு அவர் வந்தால் நல்லது.தேர்தலுக்கு பின்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்காது. அதிமுகவின் உண்மை தொண்டராக இருந்தால் அமமுக வில் இருந்து அதிமுகவிற்கு மீண்டும் திரும்புவார்கள். அமமுக ஒரு லெட்டர் பேடு கட்சி. வாக்கு சேகரிப்பதற்காக திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் அரவக்குறிச்சி சூலூர் என அனைத்து தொகுதிகளுக்கும் தினமும் செல்லும் தினகரன்,
.7 தமிழர் விடுதலை குறித்த கேள்விக்கு?
சட்டமன்றத்தில் மூலம் ஒரு தீர்மானம் ஏற்படுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.,
7 தமிழர் விடுதலை குறித்து மாநிலம் முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு வந்தபோது ஞாயிற்றுக்கிழமை கூட அமைச்சரவை கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு அமைச்சரவை முடிவு எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் இந்த விசயத்தை பொருத்தமட்டில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

About Author

error: Content is protected !!