February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அஞ்சலக சிறுசேமிப்பு கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகுறித்த சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கோவில் அஞ்சல் கோட்டம் சார்பில் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகள், அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மதுரை தென் மண்டல இயக்குனர் பவன்குமார் சிங் தலைமை தாங்கினார்.  கோவில்பட்டி அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் முருகன் வரவேற்றார்.


முகாமின் போது செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்த குழந்தைகளுக்கான கணக்குப்புத்தகத்தை தென் மண்டல இயக்குனர் பவன் குமார் சிங் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய பவன்குமார் சிங் நடப்பு ஆண்டிற்கான இலக்கு எட்ட வேண்டும் என்றும், அஞ்சல் துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் அஞ்சல் துறை ஊழியர்களிடம் விளக்கி பேசினார்.
முகாமில் கோவில் அஞ்சல் கோட்ட துணைக்கண்காணிப்பாளர் வசந்தா சிந்து தேவி, சங்கரன்கோவில் உட்கோட்ட ஆய்வாளர்  கார்த்திகை பாண்டியன், தென்காசி வணிக வளர்ச்சி அதிகாரி சங்கரநாராயணன் உட்பட பல்வேறு அஞ்சல் துறை ஊழியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி உட்கோட்ட ஆய்வாளர் ஜாய்ஸ் நன்றி கூறினார்

About Author

error: Content is protected !!