June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழா

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழா கோலாகலம்
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெற்ற மகோற்சவ விழா ஆராட்டு விழாவுடன் நிறைவு பெற்றது.

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசன் ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மகோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் 3,4,5 ஆகிய திருநாட்களில் உற்சவ பலி பூஜையும், 7 மற்றும் 8ம் திருநாட்களில் கருப்பன் துள்ளலும் நடைபெற்றது. 9ம் திருநாளான 25ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் எழுந்தருளியதும் மூங்கிலால் செய்யப்பட்ட வடத்தினை பக்தர்கள் பிடித்து இழுத்துச் சென்றனர் தேர் கோவிலை வலம் வந்த போது ஐயப்பனின் தங்க வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தேரோட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் 10ம் திருநாளான நேற்று ஐயப்பனுக்கு பம்பா நதியில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் விழாவின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (27ம் தேதி) மண்டல பூஜை நடைபெறுகிறது. இதன் பின்னர் ஐயப்பனின் திருஆபரணங்கள் அடங்கிய திருஆபரணப் பெட்டி பாதுகாப்புடன் புனலுர் அரசு கரூவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது .

 

About Author

error: Content is protected !!