May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அகரக்கட்டு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி அருகே, பழமை வாய்ந்த அகரக்கட்டு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது.நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அகரகட்டு கிராமத்தில் பழமையான புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேளதாளம் முழங்க திருக்கொடி பவனி நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து சார்லஸ் அடிகளார் மற்றும் அருள் அம்புரோஸ் அவர்களின் தலைமையில் ஆலயத்திற்கு முன்பு உள்ள சுமார் 50 அடி கொடி கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது விழா 13 நாட்கள் நடைபெறுகிறது வருகிற 11-ஆம் தேதி நற்கருணைப் பவனியும் திருப்பலியும் நடைபெறுகிறது 12-ஆம் தேதி தேரடி திருப்பலியும் 13-ஆம் தேதி ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் புது நன்மை விழாவும் நடைபெறுகின்றது
இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்று சென்றனர். விழா நாட்களில் கலைநிகழ்ச்சி, அன்பிய கலை நிகழ்ச்சி, ஜெபமாலை பவனி, நற்செய்திப்பெருவிழா, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை பவனி, திரு உருவ பவனி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இறுதி நாளான 13ம் தேதி புது நன்மை விழாவும், புனித அந்தோணியாரின் தேர் பவனியோடும் விழா நிறைவு பெறுகிறது.

About Author

error: Content is protected !!