February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அகத்தியரும், தேரையரும் வழிபட்டதோரண மலையில் தைப்பூச திருக்கல்யாணம்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தோரணமலை முருகன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் அகத்தியரும், தேரை சித்தரும் வழிபாடுகள் நடத்தியதாக வரலாறுகள் கூறுகின்றன.

பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காலை கணபதி ஹோமமும், விவசாயம் செழிக்க அகத்திய பூஜையும் நடைபெற்றது.

 

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சீர்வரிசை எடுத்து வருதல், மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மண்டபத்திற்கு எழுந்தருளிய சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த விழாவில் தென்காசி, கடையம், பாவூர்சத்திரம், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கே.ஆதிநாராயணன், கே.ஏ.செண்பகராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

About Author

error: Content is protected !!